Tuesday, December 4, 2018

வடிவியல்

6-ம் வகுப்பு :


    இரண்டு கோடுகள்

இணைக்கோடுகள் :


              இரு கோடுகள் இருபுறங்களிலும் முடிவின்றி ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கின்றன . இவ்விரு கோடுகளுக்கும் இடையே மாறாத செங்குத்து தொலைவு உள்ளது. எனவே இவ்விரு கோடுகள் இணைக்கோடுகள் எனப்படும்.

வெட்டும் கோடுகள்:

              இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்ட பிறகும் நீண்டு சென்று கொண்டே இருக்கும் அதுவே வெட்டும் கோடுகள் எனப்படும்.

வெட்டும் புள்ளி:


            இரண்டு கோடுகள் o  என்ற புள்ளியில் வெட்டி கொள்வதால் அப்புள்ளி வெட்டும் புள்ளி எனப்படும்.



இவ்வாறு இரண்டு கோடுகள் பற்றி விரிவாக கூறினேன்.








Thursday, November 29, 2018

வடிவியல்

6- ம் வகுப்பு :

                       கோடுகள்

கோடுகள்:

★  ஒரு கோடானது பெரியதாகவோ (அ) சிறியதாகவோ  இருக்கலாம்.

★  கோடு கிடைமட்டமாகவோ , சாய்வாகவோ, செங்குதாகவோ இருக்கலாம்.

★  ஒரு கோட்டினை எத்திசையில் திருப்பினாலும் அது கோடாகவே இருக்கும்.




பின்வருவன கோடுகள் அல்ல,


இவ்வாறு கோடுகள் பற்றி தொகுத்து கூறினேன்.






மெய்யெண்கள்

9 - ம் வகுப்பு :


   

            அறிவியல் குறியீட்டு வடிவம்


                N  என்ற எண்ணை N = a× 10 ன் அடுக்கு n  என எழுதலாம். ( 1< a < 10 , n  ஒரு முழு ) என்றவாறு குறித்தல் அறிவியல் குறியீட்டு வடிவம் எனப்படும்.



  இவ்வாறு அறிவியல் குறியீட்டு வடிவம் பற்றி விரிவாக விளக்கினேன்.

மெய்யெண்கள்

9 - ம் வகுப்பு :

 

     முறுடுகள் - மூலக்குறியீட்டு விதிகள்




முறுடுகளின் நான்கு அடிப்படை செயல்கள்:

                                 ■     முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

                                 ■     முறுடுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல்

தகவல் செயலாக்கம்

6 - ம் வகுப்பு :


    மரவுரு  வரைபடத்தை கொண்டு எண்கோவைகளை கண்டறிதல்


எண்கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுவது பற்றி அறிந்தோம். இப்போது மரவுரு வரைபடத்தை கொண்டு எண்கோவைகளை கண்டறியும் முறை பற்றி அறிவோம்.



கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை கவனமாக பார்க்க வேண்டும்

நடுவில் + உள்ளது, இடது பக்கம் இருப்பதை முதலில் எழுதலாம்,

7 × ( 9 + 2)  வலது பக்கத்தில் இருப்பதை எழுதலாம், ( 6 - 3 ) ÷ 3
இப்போது முழுமையாக எழுதலாம்,  ( 7 × ( 9 + 2 ) ) + ( ( 6 - 3 ) ÷ 3 )

இதனை தொடர்ந்து சில கணக்குகளை கூறினேன்.

Friday, November 23, 2018

தகவல் செயலாக்கம்

6-ம் வகுப்பு :



      இயற்கணித கோவைகளை மரவுரு வரைபடம் வரைதல்

இயற்கணித கோவைகள் என்பது நாம் அறிந்ததே  அதனை மரவுரு வரைபடமாக மாற்றும் முறை பற்றி அறிவோம்.

6a - 7 என்பதனை முதலில் ,
 
  6 × a என பிரிக்க வேண்டும் அடுத்து - 7 எழுத வேண்டும். இப்போது இதனை மரவுரு வரைபடமாக மாற்றுவது பற்றி காண்போம்.


இவ்வாறு கூறிய பின் இது தொடர்பான சில கணக்குகளை தீர்க்கும் முறையையும் கூறினேன்.


தகவல் செயலாக்கம்

6 -ம் வகுப்பு :

     

       மரவுரு வரைபடம்


மரவுரு வரைபடத்தில் ஒவ்வொரு கணுக்களுக்கும் இரண்டு கிளைகள் இருக்கும்.



மரவுரு வரைபடத்தை பற்றி கூறிய பின் அது தொடர்பான கணக்கினையும் மாணவர்களுக்கு கூறினேன்.

எ: கா : 1     ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மூன்று , நான்கு, ஐந்தாவது நாட்களில் விற்ற நுழைவு சீட்டுகள் முறையே 1,10,010 , 75,070, 25,720 , 35,070, 30,636 ஆகும் எனில் 5 நாட்களிலும் விற்ற மொத்த நுழைவு சீட்டுகள் எத்தனை?
தீர்வு :



இதனை தொடர்ந்து மேலும் சில கணக்கினை தீர்க்கும் முறையையும் கூறினேன்.