Sunday, September 30, 2018

21/8/2018

6-ம் வகுப்பு:

                       தகவல் செயலாக்கம்

படத்திற்குள் படம் :


                               படத்திற்குள் படம் என்பது ஒரு படத்தினுள் எவ்வளவு படங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிப்பது ஆகும்... எடுத்துக்காட்டாக பின்வரும் படத்தினை பார்ப்போம்..





   
 இந்த படத்தில் எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன. 5 முக்கோணங்கள் உள்ளன என்பதை விளக்கமாக கூறி மேலும் சில படங்களை காண்பித்து விளக்கினேன்.
  

Saturday, September 29, 2018

17/8/2018

6-ம் வகுப்பு:

                            தகவல் செயலாக்கம்

   மாய முக்கோணம்:

      *மாய முக்கோணம் என்பது சரியான எண்களை  பயன்படுத்தி முக்கோணத்தின் கூடுதல் சமமாக வருமாறு அமைத்தல் ஆகும்..
   மேலும இவெண்கள் ஒருமுறை மட்டுமே வர வேண்டும்...
   1 லிருந்து 6 வரை உள்ள எண்களை பயன்படுட்ஜி முக்கோணத்தின் கூடுதல் 12 ஆக வருமாறு அமையும் மாய முக்கோணத்தை விலகி கூறினேன்...
   

16/8/2018

6-ம் வகுப்பு:

          முறையான பட்டியலை முழுமையாக்குதல்

  * சுடோகு என்பது சில கட்டங்களில் எண்களும், சில கட்டங்களில் எண்கள் நிரப்பபடாமலும் இருக்கும் . மேலும் கிடைமட்ட கட்டடங்களும், செங்குத்தான கட்டங்களும் இருக்கும். ஒரு முறை வந்த சொல் மீண்டும் வராமல் இருக்க வேண்டும்...

இவ்வாறு சுடோகு பற்றி கூறிய பின் அதனை 3×3  கட்டங்களிலும், 4×4 கட்டங்களிலும் சுடோகுவை எழுத

15/8/2018

         சுதந்திர தின விழா



      
      ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினோம்..


13/8/2018

6-ம் வகுப்பு:

                             தகவல் செயலாக்கம்

   முறையாக பட்டியலிடுதல்: 

                 முறையாக பட்டியலிடுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை கூறி பின்னர் முறையாக பட்டியலிடுதல் என்பது எளிதான முறையில் கணக்கிடவும், மதிப்பிடவும் தேவைப்படுகிறது என்பதையும் கூறினேன்...
      
               முறையாக பட்டியலிடுதலை 2 சூழ்நிலையை கூறி விளக்கி  அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையும் கூறினேன்

9/8/2018

6-ம் வகுப்பு:

   தரவுகளை பட்டை வரைபடம் மூலம் வரைதல்

* ஒரு பட்டை வரைபடம் என்பது இணை பட்டைகள் சம உயரங்களில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு விகிதத்தில் அமைந்துள்ளவை ஆகும்.


         இவ்வாறு பட்டை வரைபடம் பற்றி கூறிய பின்னர் , பட்டை வரைபடம் மூலம் தரவுகளை குறித்தலை ஒவ்வொரு படியாக கூறி அதனை பயன்படுத்தி கணக்கினை தீர்க்கும் முறையினையும் கூறினேன்..

7/8/2017

6-ம் வகுப்பு:

      பட விளக்கபடம் மூலம் தரவுகளை குறித்தல்

            * ஒரு சொல் அல்லது சொற்றொடரை படம் வழியே குறிப்பிடுவது பட விளக்க படம்.
            - எ. கா : வானிலை, சுற்றுலா, போன்ற துறைகளில் பயன்படுகிறது.
             படவிளக்க படம் என்பது அதிகமான தரவுகள் கொடுக்க பட்டிருந்தால் அதை கணக்கிட பயன்படுகிறது. 
           இவ்வாறு படவிளக்க படம் பற்றி கூறிய பின்னர் அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறை பற்றி விளக்கி கூறினேன்.

6/8/2018

6 ம் வகுப்பு:                  

                     தரவுகளை முறைப்படுத்துதல்

            * தரவுகள் என்பது அன்றாட வாழ்வில் சேகரிக்கும் தகவல்கள்.
            * தரவுகளின் வகைகள் :
                                                    - முதல் நிலை தரவு 
                                                    - இரண்டாம் நிலை தரவு
           * திரட்ட பட்ட தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் புரிந்து கொள்ளும்  வகையில் மற்ற ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டு குறி முறையை பயன்படுத்தலாம்.
         இவ்வாறு கூறி பின்னர் நேர்கோட்டு குறி முறையை பயன்படுத்தி கணக்கு தீர்க்கபட்டது.