Thursday, November 29, 2018
தகவல் செயலாக்கம்
6 - ம் வகுப்பு :
மரவுரு வரைபடத்தை கொண்டு எண்கோவைகளை கண்டறிதல்
எண்கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுவது பற்றி அறிந்தோம். இப்போது மரவுரு வரைபடத்தை கொண்டு எண்கோவைகளை கண்டறியும் முறை பற்றி அறிவோம்.
கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை கவனமாக பார்க்க வேண்டும்
நடுவில் + உள்ளது, இடது பக்கம் இருப்பதை முதலில் எழுதலாம்,
7 × ( 9 + 2) வலது பக்கத்தில் இருப்பதை எழுதலாம், ( 6 - 3 ) ÷ 3
இப்போது முழுமையாக எழுதலாம், ( 7 × ( 9 + 2 ) ) + ( ( 6 - 3 ) ÷ 3 )
இதனை தொடர்ந்து சில கணக்குகளை கூறினேன்.
கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை கவனமாக பார்க்க வேண்டும்
நடுவில் + உள்ளது, இடது பக்கம் இருப்பதை முதலில் எழுதலாம்,
7 × ( 9 + 2) வலது பக்கத்தில் இருப்பதை எழுதலாம், ( 6 - 3 ) ÷ 3
இப்போது முழுமையாக எழுதலாம், ( 7 × ( 9 + 2 ) ) + ( ( 6 - 3 ) ÷ 3 )
இதனை தொடர்ந்து சில கணக்குகளை கூறினேன்.
Friday, November 23, 2018
தகவல் செயலாக்கம்
6 -ம் வகுப்பு :
மரவுரு வரைபடம்
மரவுரு வரைபடத்தில் ஒவ்வொரு கணுக்களுக்கும் இரண்டு கிளைகள் இருக்கும்.
மரவுரு வரைபடத்தை பற்றி கூறிய பின் அது தொடர்பான கணக்கினையும் மாணவர்களுக்கு கூறினேன்.
எ: கா : 1 ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மூன்று , நான்கு, ஐந்தாவது நாட்களில் விற்ற நுழைவு சீட்டுகள் முறையே 1,10,010 , 75,070, 25,720 , 35,070, 30,636 ஆகும் எனில் 5 நாட்களிலும் விற்ற மொத்த நுழைவு சீட்டுகள் எத்தனை?
தீர்வு :
இதனை தொடர்ந்து மேலும் சில கணக்கினை தீர்க்கும் முறையையும் கூறினேன்.
மெய்யெண்கள்
9 - ம் வகுப்பு :
முறுடுகள்
முறித்து என்பது ஒரு விகிதமுறு எண்ணின் விகிதமுறா மூலம் ஆகும்.
முறுடின் வரிசை:
ஒரு முறுடானது எந்த மூலத்திலிருந்து பெறப்படுகிறதோ, அந்த மூலத்தின் வரிசை அந்த முறுடின் வரிசை எனப்படுகிறது.
முறுடின் வகைகள் :
■ ஒரே வரிசை கொண்ட முறுடுகள் :
● இருபடி முறுடுகள்
● கன முறுடுகள்
● வெவ்வேறு வரிசை கொண்ட முறுடுகள்
■ முழுமையான அல்லது கலப்பு முறுடுகள்
■ எளிய மற்றும் கூட்டு முறுடுகள்
■ ஈரூறுப்பு முறுடு
Thursday, November 22, 2018
வடிவியல்
6- ம் வகுப்பு :
செங்குத்துக்கோடுகள் வரைதல்
நம்முடைய உயரத்தை அளக்க சுவரின் பக்கத்தில் நிற்க வைத்து செங்குத்தாக கோடு வரைய செங்குத்து கோடுகளை பயன்படுத்துவோம்.
செங்குத்து கோடுகள் :
மூலைமட்டங்கள் :
கணித உபகரணப்பெட்டியில் முக்கோண வடிவில் இரண்டு மூலைமட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு மூலைமட்டத்திலும் ஒரு செங்கோணம் உள்ளது.
ஒரு மூலைமட்டத்தின் கோணங்கள் 30° ,60° , 90° எனவும் மற்றொரு மூலைமட்டத்தின் கோணங்கள் 45°, 45°, 90° எனவும் இருக்கும் .
செங்கோணத்தை உருவாக்கும் இரண்டு விளிம்புகளிலும் சென்டிமீட்டரில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.
மூலைமட்டத்தை பயன்படுத்தி ஒரு கோட்டின் மீது ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்கு செங்குத்து கோடு வரையும் முறையும் முறையை மாணவர்களுக்கு கூறினேன்.
வடிவியல்
6- ம் வகுப்பு :
முக்கோணத்தின் அடிப்படை கூறுகள்
● ABC என்ற முக்கோணத்தில் AB, BC, CA என்பன முக்கோணத்தின் பக்கங்கள்.
● கோ A , கோ B , கோ C ஆகியவை முக்கோணத்தின் கோணங்கள்.
● முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்கள் வெட்டி கொள்ளும் புள்ளியை முனை என்கிறோம்.
● ABC என்ற முக்கோணத்தில் A, B, C ஆகியவை மூன்று முனைகள் ஆகும்.
பட்டியல் , லாபம் மற்றும் நஷ்டம்
6-ம் வகுப்பு :
நஷ்டம்
ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி அதனை குறைவான விலைக்கு விற்பதே நஷ்டம் ஆகும்.
நட்டம் = அடக்கவிலை _ விற்பனை விலை
எ. கா :
ஒரு பழ வணிகர் ஒரு கூடை பழங்களை 500 க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்களை நசுங்கி விட்டன. மீதம் உள்ள பழங்களை 480 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய நட்டம் காண்க.
தீர்வு :
அடக்கவிலை = 500
விற்பனை விலை = 480
நட்டம் = அடக்க விலை _ விற்பனை விலை
= 500 _ 480
= 20
இவ்வாறு மாணவர்களுக்கு நட்டம் பற்றி கூறி பின்பு அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையையும் கூறினேன்.
பட்டியல் , லாபம் , மற்றும் நஷ்டம்
6- ம் வகுப்பு :
லாபம்
ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பதே லாபம் ஆகும்.
லாபம் = விற்பனை விலை _ அடக்கவிலை
எ. கா :
ஒரு மேசையானது 4500 கு வங்கப்பட்டு 4800 கு விற்கப்படுகிறது எனில் லாபம் காண்க.
தீர்வு :
அடக்கவிலை = 4500
விற்பனை விலை = 4800
லாபம் = விற்பனை விலை _ அடக்கவிலை
= 4800 _4500
= 300
இதனை தொடர்ந்து மேலும் சில கணக்குகளை தீர்க்கும் முறையை மாணவர்களுக்கு கூறினேன்.
இயற்கணிதம்
9-ம் வகுப்பு :
தொகுமுறை வகுத்தல்
பல்லுருப்பு கோவைகளை நேரிய காரணிகளாக வகுபதற்கு தொகுமுறை வகுத்தல் என்பது சிறந்த முறையாகும்.
பின்பற்ற வேண்டிய படிகள் :
படி 1 :
வகுபடும் கோவை மற்றும் வகுக்கும் கோவை இரண்டையும் திட்ட வடிவிற்கு மாற்ற வேண்டும்.
படி 2 :
வகுபடும் கோவையின் கெழுக்களை முதல் வரிசையில் எழுத வேண்டும். விடுபட்ட உறுப்பின் கெழுவுக்கு 0 என் பிரதியிட.
படி 3 :
வகுபடும் கோவையின் பூஜ்ஜியம் காண வேண்டும்.
படி 4 :
வகுபடும் கோவையின் பூஜ்ஜியத்தை முதல் வரிசைக்கு முன்னால் எழுத வேண்டும். இரண்டாம் வரிசையில் பூஜ்ஜியத்தை முதல் உறுப்புக்கு கீழே எழுத வேண்டும்.
படி 5 :
இவ்வாறு தொகுமுறை வகுத்தல் செய்யும் முறையை கூறி அது தொடர்பான கணக்கினை விரிவாக கூறினேன்.
Tuesday, November 20, 2018
அளவைகள்
6 - ம் வகுப்பு :
லீப் ஆண்டு ( நெட்டாண்டு )
பூமி , சூரியனை சுற்றி வர 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம் எடுத்து கொள்ளும்.
365 நாட்களை 1 ஆண்டாக எடுத்து கொள்வோம் ஒவ்வோர் ஆண்டிலும் மீதம் 6 மணி நேரத்தை சரி செய்ய ஒவ்வொரு 4 ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நாளை சேர்த்து கொள்கிறோம்.
ஒவ்வொரு 4 ஆவது ஆண்டும் 365 நாய்கள் + 1 நாள் = 366 நாட்களை பெற்றிருக்கும்.
1 நாள் ஒவ்வொரு 4 ஆவது ஆண்டில் வரும் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படும்.
எனவே 366 நாட்கள் கொண்ட ஆண்டை லீப் ஆண்டு என்கிறோம்.
இவ்வாறு லீப் ஆண்டு பற்றி கூறி பின்பு அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையையும் மானவர்களுக்கு விரிவாக கூறினேன்.
இயற்கணிதம்
இருபடி பல்லுருப்பு கோவைகளை காரணிப்படுத்துதல் :
பின்பற்ற வேண்டிய படிகள் :
படி 1 :
X2 ன் கெழுவை மாறிலி உறுப்புடன் பெருக்க வேண்டும். அதாவது ac .
படி 2 :
ac ஐ இரு காரணிகளாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கும் போது காரணிகளின் கூடுதல் மற்றும் பெருக்கல் முறையே b மற்றும் ac க்கு சமமாக இருக்க வேண்டும்.
படி 3 :
இப்படிகளை கூறி பின்பு அது தொடர்பான கணக்கினை மாணவர்களுக்கு பிரிவாக கூறினேன்.
Saturday, November 17, 2018
அளவைகள்
6-ம் வகுப்பு :
வெவ்வேறு அளவுகளையுடைய அளவுகளின் அடிப்படை செயல்கள் :
தசம எண்களின் அடிப்படை செயல்களை செய்வது போன்று ஒரே மெட்ரிக் அலகுகளில் இடம்பெறும் அடிப்படை செயல்களையும் செய்யலாம்.
குறிப்பாக ஒரே அலகில் உள்ள அளவுகளை கூட்டவோ / கழிக்கவோ முடியும்.
ஆனால் வெவ்வேறு அலகுகளில் உள்ள அளவுகளை ஒரே அலகுகளாக மாற்றிய பிறகே கூட்டவோ / கழிக்கவோ முடியும்.
இவ்வாறு கூறி அதன் பிறகு அது தொடர்பான கணக்கினை மாணவர்களுக்கு கூறினேன்.
அளவைகள்
6-ம் வகுப்பு
மெட்ரிக் அளவைகளின் இனமாற்றம்
மெட்ரிக் அளவைகளில் உள்ள நீள அலகுகள் அனைத்தும் மீட்டரை அடிப்படையாக கொண்டவை. இவற்றுடன் ஒரு பன்னாட்டு அலகு சேர்க்கப்படும் போது பத்தடிமான எண் முறையில் மாற்றம் பெறுகிறது. இதே போல் எடை மற்றும் கொள்ளளவு அலகுகள் முறையே கிராம் மற்றும் லிட்டரில் குறிக்கப்படுகின்றது.
நீளம் :
1கி.மீ = 1000 மீ
1 மீ = 100 செ. மீ
1 மீ = 1000 மி.மீ
1 செ. மீ = 10 மி.மீ
எடை :
1கி.கி = 1000 கி
1 கி = 1000 மி.கி
கொள்ளளவு :
1 கி.லி = 1000 லி
இயற்கணிதம்
9-ம் வகுப்பு :
காரணிப்படுத்துதல்
காரணிப்படுத்துதல் என்பது பெருக்கலின் தலைகீழி ஆகும்.
காரணிப்படுத்துதலின் இரு முக்கிய வழிமுறைகள் :
1 . பொதுவான காரணிமுறை
ab + ac
a ( b + c )
2. குழுவாக எழுதுதல்
a + b - pa - pb
(a+b) - p ( a+ b)
(a+b) (1-p)
மீப்பெரு பொது வகுத்தி :
2 அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுருப்பு கோவைகளின் மீ. பெ.வ என்பது அதன் பொது காரணிகளுள் அதிக பட்ச பொது படியை கொண்ட ஒரு பல்லுருப்பு கோவையாகும்.
எ.கா : 14x2 , 42 by
14x2 = 1.2.7.x.y.y
42xy = 1.2.3.7.x.y
மீ. பெ.வ = 1.2.7.x.y
= 14xy
அது தொடர்பான கணக்கினை விரிவாக கூறினேன்.
இயற்கணிதம்
9-ம் வகுப்பு :
மூன்று ஈருறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலனை உள்ளடக்கிய முற்றொருமைகள் :
(x+a) (x+b) (x+c) = x3 + (a+b+c) x2 + ( ab+bc+ca ) x + abc
இவாய்ப்பாட்டை கூறி பின்பு அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையையும் விரிவாக கூறினேன்.
இயற்கணிதம்
9-ம் வகுப்பு :
இயற்கணித முற்றொருமைகள்
முந்தைய வகுப்பில் படித்த முற்றொருமைகளை கூரிய பின் ,
(a+b+c)2 என்ற மூவுறுப்பு கோவையின் விரிவாக்கத்தை விளக்கினேன்.
அதாவது ,
(x+y)2 = x2 + y2 + 2xy
x = a+b , y = c
(a+b+c)2 = (a+b)2 +(c)2 +2 × (a+b) × c
= a2 + b2 + 2ab + c2 + 2ac + 2b
( a+b+c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
இவ்வாய்ப்பாட்டை கூறி இது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையை கூறினேன்.
இயற்கணிதம்
9-ம் வகுப்பு :
காரணித் தேற்றம்
P(x) என்ற பல்லுருப்பு கோவையின் படி n > 1 மற்றும் a என்பது ஒரு மெய்யென் எனில் ,
◆ p(a) = 0 ஆக உள்ளபோது (x - a) என்பது p(x) ன் ஒரு காரணி ஆகும்.
◆ ( x - a ) என்பது P(x) ன் ஒரு காரணி எனில், p(a) =0 ஆகும்.
மேற்கூறிய தேற்றத்தினை கூறி பின்பு அதை நிரூபிக்கும் முறையையும் கூறினேன்.
மேலும் அது தொடர்பான கணக்கினை மாணவர்கள் புரியும் வகையில் விளக்கினேன்.
எண்கள்
6-ம் வகுப்பு :
வகுபடுந்தன்மை
2 ஆல் வகுபடும்தன்மை :
ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் 2,4,6,8,0 ஆகிய எண்களில் ஏதேனும் ஓர் எண்ணாக இருந்தால் அந்த எண் 2 ஆல் வகுபடும்.
3 ஆல் வகுபடும்தன்மை :
ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 3 ஆல் வகுபடும்.
4 ஆல் வகுபடும்தன்மை :
ஓர் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 4 ஆல் வகுபடும்.
6 ஆல் வகுபடும்தன்மை :
ஓர் எண் ஆனது 2 மற்றும் 3 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 6 ஆல் வகுபடும்.
Friday, November 2, 2018
புள்ளியியல்
9-ம் வகுப்பு :
முகடு
அதிக முறை இடம் பெற்றுள்ள உறுப்பே முகடு.
எ. கா : 1,4,4,3,1,5,4
முகடு = 4
எ.கா :
எ.கா :
வகைப்படுத்தப்பட்ட நிகழ்வெண் பரவல் :
அதிக நிகழ்வெண் பெற்றுள்ள உறுப்பு முகடு.
வகைப்படுத்தப்படாத நிகழ்வெண் பரவல் :
முகடு = l + ( f - f1 / 2f - f1 - f2 ) × c
L _ முகட்டுப்பிரிவின் கீழ் எல்லை
F _ முகட்டுப்பிரிவின் நிகழ்வெண்
F1 _ முகட்டுப்பிரிவின் முந்தைய நிகழ்வெண்
F2 _ முகட்டுப்பிரிவின் பிந்தைய நிகழ்வெண்
C _ முகட்டுப்பிரிவின் நீளம்.
புள்ளியியல்
9- ம் வகுப்பு :
இடைநிலை அளவு
ஏறு அல்லது இறங்கு வரிசையில் அடுக்கப்பட்ட மதிப்புகளை இரண்டு சம பாகங்களாக பிரிக்கும் மைய மதிப்பு இடைநிலை அளவு ஆகும்.
ஒற்றை எண் :
( n + 1 / 2) ஆவது உறுப்பு
எ. கா : 7,21,45,12,56,35,25,0,58,66,29
ஏறுவரிசை : 0,7,12,21,25,29,35,45,56,58,66
இடைநிலை அளவு = ( n+1/2 ) ஆவது உறுப்பு
= ( 11+1/2 ) ஆவது உறுப்பு
= 6 ஆவது உறுப்பு
= 29
இரட்டை எண் :
( n/2 ) ஆவது உறுப்பு மற்றும் ( n/2+1 ) ஆவது உறுப்புகளின் சராசரி
எ . கா :
10,17,16,21,13,18,12,10,19,32
ஏறுவரிசை : 10,10,12,13,16,17,18,19,21,22
இடைநிலை அளவு = ( n/2 ) ஆவது உறுப்பு ( n/2+1) ஆவது உறுப்புகளின் சராசரி
= ( 10/2 ) ஆவது உறுப்பு ( 10/2+1 ) ஆவது உறுப்புகளின் சராசரி
= 5 ஆவது உறுப்பு 6 ஆவது உறுப்புகளின் சராசரி
= 16 + 17 / 2
= 33/2
= 16.5
Subscribe to:
Posts (Atom)